துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

விருதுநகர்,பிப்.26:  கிராம ஊராட்சிகளில் அரசாணைப்படி காலமுறை ஊதியம் வழங்க துப்புரவு பணியாளர்களுக்கு கோரிக்கை மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டவிழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமையில் துப்புரவு பணியாளர்கள் அளித்த மனு: கிராம ஊராட்சிகளில் 16,726 துப்புரவு பணியாளர்ளை தொகுப் பூதியமாக 2013ல் அமர்த்தப்பட்டனர். இந்த தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி காலமுறை ஊதியம் பெறுவோராக அறிவத்து காலமுறை ஊதியம் வழங்கவில்லை. இதற்கான காலமுறை ஊதியம் வழங்காமல் மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இதனால் துப்புரவு பணியாளர்கள் சிரமத்தில் உள்ளனர். துப்புரவு பணியாளர்கள் நிலை கருதி அரசாணைப்படி காலமுறை ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: