ஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை, பிப். 21: ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற மதுரை போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு போலீசார், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மதுரை போலீஸ் கமிஷனரான டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி மதுரையில் போலீஸ் கமிஷனராக பதவியேற்றார். இவர் பொறுப்பேற்றதும் மதுரை நகரில் உள்ள 2,000 வீதிகளை கண்காணிக்க சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும், வீதிக்கு ஒரு எஸ்ஐ மற்றும் போலீசார் பொறுப்பு அதிகாரியாக நியமனம் செய்தார். பொதுமக்கள் கொடுக்கும் புகாருக்கு உடனடியாக விசாரணை செய்து எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால் பல மாதமாக கிடப்பில் கிடந்த பல்வேறு புகார்களுக்கு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு போலீசார், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்,

Advertising
Advertising

Related Stories: