மதுரை, ஜன. 8: இளநிலை உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மூலம் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 9 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று வழங்கினார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரவீன் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வானதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
