மதுரை, ஜன. 7: மதுரை, பேச்சியம்மன் படித்துறை அருகே உள்ள ஆறுமுச்சந்தி சந்திப்பில் தமிழ்நாடு எச்எம்எஸ் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் முத்துலிங்கம், மாநில செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், பொது செயலாளர் கணேசன், எச்எம்எஸ் பேரவை தலைவர் சுப்பிரமணியபிள்ளை, செயலாளர் பாதர் வெள்ளை உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ரூ.7,000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்களுக்கு ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், நான்கு தொழிலாளர் சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
