மதுரை, ஜன. 8: மதுரை மாநகராட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுப் பகுதிகளிலும் தமிழக அரசின் அரசாணைப்படி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் ஜன.16 வெள்ளிக்கிழமையன்று அனைத்து வித இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது. மேலும் இதற்கென கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், பொது சுகாதாரச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
