திருமங்கலம், ஜன. 9: விருதுநகர் கணேஷ் நகரை சேர்ந்தவர் குருசாமி (65). ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ. இவர் நேற்று தனது காரில் மருமகனுடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றபோது, திருமங்கலம் மேலக்கோட்டை விலக்கு அருகே, இவர்களது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்தது.
இதனை கண்ட குருசாமி காரை சாலையோரம் நிறுத்தினார். இருவரும் கீழே இறங்கிய நிலையில் கார் மளமளவென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்த அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
