மூச்சுத்திணறி இளம்பெண் சாவு

மதுரை, ஜன. 8: மதுரை ஒர்க்ஷாப் ரோட்டை சேர்ந்தவர் பாலாஜி(35). இவரது மனைவி பவித்ரா(28). இவருக்கு ஏற்கனவே சுவாசிப்பதில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு மூச்சு விடுவதில் மேலும் சிரமம் அதிகரித்தது. அவரை ஆட்டோவில் தூக்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் அபாயகட்டதத்தில் இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

Related Stories: