4வது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை, ஜன. 9: தமிழகத்தில் 1.6.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் நடைபெறும் இப்போராட்டம் நேற்று 4வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார்.

இதில் 50க்கும் மேற்பட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வவியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதுடன் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களின் போராட்டத்தால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையின்றி பயிற்சி ஆசிரியர்கள் அல்லது அருகாமையில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: