பேரணி, ஊர்வலத்தால் 500 பஸ்கள் இயக்கம் பாதிப்

பு கோவை, பிப்.20: கோவை நகரில் நேற்று பல்வேறு அமைப்புகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு காட்டி பேரணி, மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. பல ஆயிரம் பேர் உக்கடம் முதல் கலெக்டர் அலுவலகம் வரையுள்ள ரோடு, அவினாசி ரோடு மேம்பாலம், திருச்சி ரோடு என நகரின் மையப்பகுதியை முற்றுகையிட்டு குவிந்தனர். சுமார் 1,200 போலீசார் குவிந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பேரணி காரணமாக உக்கடம் பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம் டவுன், விரைவு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து பெரும்பாலான பஸ்களை இயக்க முடியவில்லை. காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சில பஸ்கள் வழிதடம் மாற்றி இயக்கப்பட்டன. பஸ்கள் கிடைக்காமல் பல ஆயிரம் பேர் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக உக்கடம், காந்திபுரம் செல்லவேண்டிய பயணிகள் நடந்து சென்றனர். குடியுரிமை விவகாரத்தில் உக்கடம் பகுதியில் நடந்த பேரணி, வ.உ.சி பூங்கா நோக்கி நடந்த பேரணியின் போது இதேபோல் பஸ்களின் இயக்கம் முடங்கியது. பஸ்கள், ஆட்டோ, கார்கள் ஓடாத நிலையில் கோவை ரயில் நிலையத்திற்கும் பொதுமக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

Related Stories: