ராசிபுரம் அருகே போதமலையில் கொளுந்து விட்டு எரிந்த காட்டுத்தீ

ராசிபுரம். பிப்.19: ராசிபுரம் அருகே போதமலையில் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது போதமலை. இங்கு மேலூர் மற்றும் கீழூர்,  கெடமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை புதுப்பாளையம் பகுதியிலிருந்து போதமலைக்கு செல்லும் மலைப்பகுதியில் லேசாக தீப்பற்றிகொண்டது. சிறிது நேரத்திலேயே காட்டுத்தீ மளமளவென பரவி காடு முழுவதும் எரிய தொடங்கியது.

இதுகுறித்து ராசிபுரம் வனத்துறை மற்றும் தீயணைப்புதுறையினரூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்தனர். ஆனால், தீப்பற்றிய இடத்திற்கு செல்ல முடியாமலும், தீயை அணைக்கமுடியாமலும் தவிப்பிற்குள்ளாகினர். அதற்குள் இரவு நேரமாகி விட்டதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயினால் போதமலை பகுதியிலுள்ள அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் மட்டுமன்றி காட்டு விலங்குகளும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: