தி.கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

நாமக்கல், மே 4: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, நேற்று வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தி.கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: