24 மையங்களில் 10,792 பேர் நீட் தேர்வு எழுதினர்

சேலம், மே 6: நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்ககை நடத்தப்படுகிறது. 2024-25ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 557 நகரங்களில் நேற்று நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவ், மாணவிக் நீட் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.

சேலம் மாவட்டத்தில் 11,144 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு 24 மையங்களில் நேற்று நடந்தது. இதில், 10,792 பேர் தேர்வை எழுதினர். 351 பேர் தேர்வு எழுத வரவில்லை. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது. சின்ன திருப்பதியில் உள்ள ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, செவ்வாய்பேட்டை, அயோத்தியாபட்டணம், அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள வித்யாமந்திர் பள்ளி, நோட்டரி டேம், எமரால்டுவேலி, ஹோலிகிராஸ், சுவாமி, தாகூர் ஆகிய பள்ளிகளிலும், சேலம் சோனா கல்லூரி, சக்தி கைலாஷ், வைஸ்யா, வித்யாமந்திர் ஆகிய கல்லூரிகளிலும் என மொத்தம் 24 தேர்வு மையங்களில், மாணவ, மாணவிகளுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வந்தனர். அவர்களை மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டனர். கடும் கட்டுபாடுகளுடன் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் காகிதம், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், மற்றும் எலக்டர்ானிக்ஸ் பொருட்கள் அனுமதிக்கப்பட வில்லை. தேர்வு மையங்களுக்கு மாணவிகளை பெறறோர் அழைத்து வந்தனர். அவர்கள் மையங்களுக்கு வெளியே காத்திருந்து தேர்வு முடிந்ததும் மாணவிகளை அழைத்துச் சென்றனர். தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தேசிய தேர்வுகள் முகமை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசார் தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post 24 மையங்களில் 10,792 பேர் நீட் தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: