வேலூர் அடுத்த அணைக்கட்டில் விதிமீறிய 12 வாகனங்களுக்கு ₹78 ஆயிரம் அபராதம்

வேலூர், பிப்.19: வேலூர் அடுத்த அணைக்கட்டில் விதிமீறிய 12 வாகனங்களுக்கு ₹78 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வேலூர், அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனையிட்டனர். இதில் வரி செலுத்தாதது, உரிய ஆவணங்கள் இல்லாதது என்று 3 சரக்கு வாகனங்கள், 2 பைக்குகள், 2 கார்கள் உட்பட 12 விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் அபராதம் ₹12,500ம், வரி ₹12,500ம் வசூலிக்கப்பட்டது. பிற மாவட்ட வாகனங்களுக்கு ₹28ஆயிரம் அபராதமும், வரி ₹25ஆயிரம் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டது. மொத்தம் 38 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. வரி, அபராதம் உட்பட மொத்தம் ₹78 ஆயிரம் விதிக்கப்பட்டது. 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertising
Advertising

Related Stories: