மிளகு கிலோவுக்கு ₹100 சரிவு

சேலம், பிப்.18: தமிழகத்தில் ஏற்காடு, கொல்லிமலை, தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவில் திருச்சூர், பாலக்காடு உள்பட பல பகுதிகளிலும் மிளகுச்செடிகள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மிளகு இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதமாக மிளகு விலை அதிகரித்திருந்தது. ஒரு கிலோ மிளகு ₹450 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு மிளகு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ₹450க்கு விற்ற ஒரு கிலோ ₹100 சரிந்து, தற்போது ₹350க்கு விற்கப்படுகிறது என்று மளிகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: