சேலம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

சேலம், பிப்.18: சேலம்  மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகரில் உள்ள சேலம் பொறியியல் மற்றும்  தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்  300க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் 1,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு  ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களாக  கல்லூரியின் முன்னாள் மாணவ, மாணவிகளான சென்னை கேட்டர்பில்லர்  டிசைன் பொறியாளர் பொன்னுசாமி, பெங்களூரு அண்ட்வில் குரூப் ஆப் கம்பெனிகள் சீனியர் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் நிர்வாகி கோகுல் விஜய், சென்னை எஸ்.எல். லூமேக் உதவி அதிகாரி ராஜேஸ்வரி,  பெங்களூரு விப்ரோ பிரைவேட் லிமிடட்  எம்ஐஎஸ் நிர்வாகி லட்சுமி பிரியா ஆகியோர் கலந்து  கொண்டு பேசினர். தொடர்ந்து கல்லூரி இறுதி  ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வழியனுப்பு விழா  நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டு, தங்களுடைய  அனுபவங்களை  பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் லோகநாதன், செயலாளர் பாலு, பொருளாளர் ஆனந்தன், உதவி தலைவர்கள் ஞானசேகரன், வெங்கட்பதி, திருஞானம், டாக்டர் சங்கரன்,  பேராசிரியர்கள் வாழ்த்துரை  வழங்கினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள், காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டது. 

Related Stories: