கபிஸ்தலம் ஜேக் அண்டு ஜில் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா

பாபநாசம், பிப். 18: கபிஸ்தலம் ஜேக் அண்டு ஜில் மெட்ரிக் பள்ளியில் 29ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தஞ்சை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, கபிஸ்தலம் பாலக்கரையில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தார். ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் பள்ளியின் மைதானத்தை அடைந்தனர். பின்னர் விளையாட்டு போட்டிகள் துவங்கியது. பள்ளி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஆலன்ரிச்சி மைக்கேல், சிறப்பு விருந்தினரான தேன்மதிக்கு நினைவு பரிசு வழங்கினார். பள்ளி டிரஸ்டி மைக்கேல், பாபநாசம் உடற்கல்வி ஆசிரியர் சிவராஜிக்கு பொன்னாடை போர்த்தினார். விளையாட்டு போட்டிகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சற்குணன் சிறப்பாக நடத்தி முடித்தார்.

Related Stories: