நாகையில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிக்கு அடையாள அட்டை

நாகை, பிப். 18: நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் மற்றும் பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

கலெக்டர் பிரவீன் பி நாயர் தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் குறை தீர் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 13 மனுக்களும், பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 342 மனுக்கள் என மொத்தம் 355 மனுக்கள் பெறப்பட்டது.

மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த ஒருவரது மனுவினைப் பரிசீலித்து உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அவருக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையினை கலெக்டர் வழங்கினார். டிஆர்ஓ இந்துமதி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: