பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை, பிப். 18: நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க அமைப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் லூர்துசாமி, வீரசேகர், வட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஜெயராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ ஆகியோர் பேசினர்.

ஊதியக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட குறைந்த பட்ச பென்ஷன் ரூ.7 ஆயிரத்து 850 பள்ளி சத்துணவு மைய ஓய்வூதியர், அங்கன்வாடி மைய ஓய்வூதியர்களுக்கு வழங்கவேண்டும். சிறப்பு பென்ஷன் பெறும் அனைவருக்கும் கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீதம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவை வழங்க வேண்டும். ரூ. 2 ஆயிரம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி மருத்துவப்படி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டில் இணைக்க வேண்டும். ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும். இலவச பஸ் பாஸ் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். வட்ட பொருளாளர் ராஜாமணி நன்றி கூறினார்.

Related Stories: