ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு மனைவியுடன் தகராறு வடமாநில இளைஞர் தற்கொலை

திருவாரூர், பிப்.18: பஞ்சாப் மாநிலம் பட்டேலா பகுதியை சேர்ந்தவர்கள் சுக்விந்தர் சிங் (32) மற்றும் பல்பீர்சிங். உறவினர்களான இவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அறுவடை இயந்திரத்தை கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுக்விந்தர்சிங்க்கு அவரது மனைவியிடமிருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்ததையடுத்து இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து மனமுடைந்த சுக்விந்தர்சிங் அன்று மாலையே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பல்பீர்சிங் அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மனிதாபிமானம் தேவைசிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன் கூறுகையில், காலை நேரத்தில் வெயில் அதிகமாக இருந்த நிலையில் நிழலில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என முற்பட்டபோது போலீதார் அதற்கு அனுமதி மறுத்ததன் காரணமாக பெண்கள் உட்பட அனைவரும் வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே தையல் தொழிலாளர் சங்க மாநில தலைவருக்கு மயக்கம் ஏற்பட்டது. எனவே வரும் காலங்களிலாவது இதுபோன்று இல்லாமல் மனிதாபிமான முறையில் போலீசார் நடந்து கொள்ள வேண்டுமென முருகையன் தெரிவித்தார்.

Related Stories: