திருவாரூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி

திருவாரூர், பிப்.18: திருவாரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக தன்னார்வ அமைப்பு ஒன்று சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பத்து ரூபா இயக்கம் என்ற பெயரில் இயங்கி வரும் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு அமைப்பு சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்தனர்.

அதில் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்று நடுதல் மற்றும் குளம், குட்டைகள் வெட்டுதல் போன்ற பல்வேறு பணிகளில் கடந்த 3 ஆண்டு காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: