நோயாளிகள் பீதி ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை

ராஜபாளையம், பிப்.17: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் கணிணி பொறியியல் துறை, ஐஐசி, இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), ஆர்ஐடி சைபர் செக்யூரிட்டி செல் மற்றும் கீக்ஸ்லேப் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய அளவிலான `பிளாக்செயின் தொழில்நுட்பம்’ குறித்த பயிற்சி வகுப்புகள் 2 நாட்கள் நடைபெற்றது. கணினி பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் யோகராஜா வரவேற்றார். கணினி பொறியியல் துறைத்தலைவர் முனைவர் விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார். கீக்ஸ்-லேபை சேர்ந்த லகன்தர்சன் இப்பயிற்சிப் பட்டறைக்கான வகுப்புகளை கையாண்டார்.

இப்பயிற்சியில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 54க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர். பிட்காய்ன், ஹைப்பர்லெட்ஜ்ர் மற்றும் எத்தேரியம் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பிளாக்செயின் பற்றிய அறிமுகத்துடன் இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இவ்வகுப்பின் இரண்டாவது நாளில், எளிய பிளாக்செயின் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவாக பயிற்சியின் பங்கேற்பாளர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் பிரபாகரனின் நன்றி கூறினார்.

Related Stories: