தலைஞாயிறு பகுதியில் மக்களை தேடி சென்று குறை கேட்கும் முகாம் ஒன்றியக்குழு தலைவர் பங்கேற்பு

வேதாரண்யம்,பிப்.17: தலைஞாயிறு பகுதியில் மக்களை தேடி சென்று குறை கேட்கும் முகாமில் ஒன்றியக்குழு தலைவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பதவியேற்ற பின்பு முதல் முறையாக பல்வேறு ஊராட்சியில் மக்களைதேடி சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உள்ளபாங்கல், பனங்காடி, கொளப்பாடு. கொத்தங்குடி, கச்சநகரம் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர். சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி, அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பல்வேறு அரசு கட்டிடங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தார். பல்வேறு இடங்களில் பொதுமக்கள், குடிநீர், தெருவிளக்குகள் இல்லாதது குறித்து நேரிடையாக குறைகளை தெரிவித்தனர். அவற்றை உடன் நிவர்த்தி செய்வதாக பொதுமக்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் உறுதியளித்தார். மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுமாறு அறிவுரை வழங்கினார். உடன் ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேருர் செயலாளர் சுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தியாகராஜன், மலர்கொடி, திட்டமேலாளர் பழ.பக்கிரிசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உடன் சென்றனர்.

Related Stories: