மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் டிடிவி தினகரன் பங்கேற்பு

மன்னார்குடி, பிப். 13:திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் நடை பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமமுக பொதுச் செயலாளரும், ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் நேற்று மன்னார்குடிக்கு வந்தார். முன்னதாக மாவட்ட அமமுக சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான எஸ். காமராஜ் தலைமையில் மாவ ட்ட எல்லையான வடுவூரில் டிடிவி தினகரனுக்கு கட்சி நிர்வாகிகள் தொண் டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மன்னை நகர அமமுக சார்பில் மேலவாசலில் நகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மன்னார்குடி பிபி மகாலில் நடைபெற்ற பருத்திக் கோட் டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் இல்ல மணவிழா விற்கு டிடிவி தினகரன் தலைமை வகித்து மணமக்கள் டாக்டர் ஷகிலா, பொறியாளர் அருண் ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி பேசினார். மன்னார்குடி ஏகேஎஸ் திருமண அரங்கில் நடைபெற்ற கார்த்திகேயன், கிருபா ஆகியோரின் திருமணத்தை டிடிவி தினகரன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து காவரப்பட்டு கிராமத்திற்கு சென்ற டிடிவி தினகரன் அங்கு நடைபெற்ற அமமுக நகர மாணவரணி துணைத் தலைவர் மூவேந்தன், சிவரஞ்சனி ஆகியோரின் திருமணத்திற்கு தலைமை வகித்து நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் பேரையூர் கிராமத்திற்கு சென்ற அவர் அங்கு அமமுக கட்சி கிளை அலுவலகத்தை திறந்து வைத்து கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கருவாக்குறிச்சி கிராமத்தில் உள்ள அமமுக நீடா தெற்கு ஒன்றிய செயலாளர் தனபால் இல்லத்திற்கு சென்ற டிடிவி தினகரன் அங்கு மண மக்கள் கிருஷ்ணவேணி (எ) வேம்பு, ராஜு ஆகியோரை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து கருவாக்குறிச்சி காந்தி சிலைக்கு மாலையணிவித்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அப்போது நன்னி லம் ஒன்றிய தேமுதிக செயலாளர் குமார், மன்னார்குடி அசேஷம் பகுதியை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விசுவநாதன் ஆகியோர் அக்கட்சிகளின் இருந்து விலகி டிடிவி தினகரன் முன்னிலையில் தங்களை அமமுகவில் இணைத்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளில் துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் எம்எல்ஏ தஞ்சை ரங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன், மாநில தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் பைங்காநாடு மலர் வேந்தன், அம்மா தொழிற் சங்க மாநில துணைச் செயலாளர் சத்ய முர்த்தி, மாவட்ட மாநில துணைத் தலைவர் ஆசைத்தம்பி, ஒன்றிய செயலாளர்கள் பைங்காநாடு அசோகன், ரங்கசாமி, சங்கர், தனபால், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் வழக்கறிஞர் அமிர்தராஜா, மாவ ட்ட துணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணச்செல்வன், மாவட்ட இணைச் செயலாளர் இளவரசி உள்ளிட்ட ஏராளாமான நிர்வாகிகள் தொண் டர்கள் பங்கேற்றனர்.

Related Stories: