விசி கூட்டத்தில் வலியுறுத்தல் பெரம்பலூர் மாவட்டத்தில் 70 சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.42 கோடியில் கடனுதவி

பெரம்பலூர்,பிப்.12: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 மகளிர் சுய உதவிக்குழு க்களுக்கு ரூ.2.42கோடி மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கி னார். பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார் பில் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த 70 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2.42 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்தில் நடைபெற்ற கடன் முகாமில் மாவட்ட கலெக்டர் சாந்தா கலந்துகொண்டு 17மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள், வாலிகண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாகண்ணு, துணைத்தலைவர் பவானி ரெங்கராஜ், யூனி யன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளை மேலா ளர் அருண்பாலாஜி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

Related Stories: