கோவில்பட்டியில் மாநில வாலிபால் போட்டி காஞ்சிபுரம் கல்லூரி அணி வெற்றி'

கோவில்பட்டி, பிப்.11: கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் மண்டலம் காட்டாங்குளத்தூர் வள்ளியம்மமை பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் வெற்றி பெற்றனர்.

 2019-20ம் கல்வியாண்டிற்கான தமிழகம் மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், கோவை, மதுரை, தஞ்சை, சென்னை, நாகை, புதுச்சோரி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரை சேர்ந்த வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் முதலிடமும், நாகை, புதுச்சேரி மண்டலம் விழுப்புரத்தை சேர்ந்த ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் 2வது இடமும், நெல்லை மண்டலம் வடக்கன்குளம் தி இந்தியன் பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் 3வது இடமும், சேலம் மண்டலம் மல்லூர் சேலத்தை சேர்ந்த தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் 4வது இடமும் பெற்றனர்.   மாநில அளவிலான இப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளை பாராட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் தலைவரும், கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருமான ராஜேஸ்வரன் பரிசு கோப்பை வழங்கினார். ஏற்பாடுகளை கோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாசலம் வழிகாட்டுதலின்படி கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் சிவராஜ், ராம்குமார், ரகு, சிவனேஷ், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பால்துரை, சத்தியமூர்த்தி செய்திருந்தனர்.

Related Stories: