நீடாமங்கலம் ஆதனூரில் மன்னார்குடி அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கம்

நீடாமங்கலம், பிப். 7: நீடாமங்கலம் அருகில் ஆதனூர் கிராமத்தில் உள்ள அமிர்தபுரி புண்ணிய வேதாந்த தோட்டத்தில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவர்களின் நாட்டுநலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா கல்லூரி முதல்வர் ரவி தலைமையில் நடந்தது. அமிர்தகரா நிர்வாக தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் பிரபாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு நாட்டு நலப்பணி திட்ட முகாமை தொடங்கி வைத்தார். முனைவர்கள் கோபிநாதன், ராமு, மாறன், ராஜா, மலர்மன்னன் உள்ளிட்ட முனைவர்கள், பசுமை கரங்கள் மன்னை கைலாசம், முன்னாள் ஊராட்சி தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாலை தூய்மை பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பணிகளை மாணவர்கள் தொடங்கினர். முனைவர் ஆகாஷ் நன்றி கூறினார்.

Related Stories: