தி.பூண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

திருத்துறைப்பூண்டி, பிப். 7: திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வீடுகள், விளக்குடி ஊராட்சியில் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பறை, பனையூர் - திருப்பத்தூர் - கீழ பள்ளிசந்தம் சாலை பணி, பனையூர் விளையாட்டு மைதானம், நர்சரி உட்பட நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை திருவாரூர் மாவட்ட உதவி ஆட்சியரும் திட்டஅலுவலருமான கமல் கிஷோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார், ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், ஆணையர் சுப்பிரமணியன், பொறியாளர்கள் சூரியமூர்த்தி, ரமேஷ்கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: