திருவாரூர் மாவட்ட கலெக்டர் விளக்கம் தியாகராஜ சுவாமி கோயிலில் பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு 18 வகை அபிஷேகம்

திருவாரூர், மே 6: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நந்தி பெருமானை தரிசனம் செய்தனர். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில்வரும் பிரதோஷ நாளில் பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்த பிரதோஷம் என்பது மற்ற தினங்களை விட சனி கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்புடையதாக கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரதோஷ தினத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து வரும் நந்தி பெருமானுக்கு பால், சந்தனம், மற்றும் மஞ்சள் தூள், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகையான பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை வழிபட்டனர்.

The post திருவாரூர் மாவட்ட கலெக்டர் விளக்கம் தியாகராஜ சுவாமி கோயிலில் பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு 18 வகை அபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: