ன்றியக்குழு கூட்டத்தில் தகவல் ஒரத்தநாடு ஒன்றியக்குழு முதல்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம்

ஒரத்தநாடு, பிப்.7: ஒரத்தநாடு ஒன்றியக்குழு முதல்கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் மூலம் போராடி வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அதிமுக கவுன்சிலர்கள் வரவேற்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியகுழு முதல் கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் திமுக ஒன்றியகுழு தலைவர் பார்வதி சிவசங்கர் தலைமையிலும், ஒன்றிய ஆணையர் விஜய் முன்னிலையிலும் நடந்தது. ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட 31 உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய ஒன்றியக்குழு தலைவர் பார்வதி, அனைத்து உறுப்பினர்களும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். இந்த ஒன்றியத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கண்ணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக நீதிமன்றம் மூலம் போராடி வெற்றி பெற்றார் என்பதாலும்,

தமிழகத்தில் இதுவரை அனைத்து பகுதிகளிலும் திமுக தொடர் வெற்றியை பெற்றதாலும் திமுக தலைவருக்கு பாராட்டு தெரிவித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தத் தீர்மானத்தை 31 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் தேவதாஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுக உறுப்பினர்களும் வரவேற்றனர். இறுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியபோது ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் அவைக்கு வந்து அனைத்து ஒன்றியகுழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்கு வழக்கில் உள்ளதால் ஒன்றியக்குழு கூட்டம் அத்துடன் முடிந்தது.

Related Stories: