பொன்னமராவதி பகுதியில் பூச்சியால் பாதிக்கப்பட்ட பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

பொன்னமராவதி, பிப். 7: பொன்னமராவதி வட்டாரத்தில் பூச்சிகளினால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு போதிய இழப்பீடு வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.பொன்னமராவதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் அரசமலை கணேசபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏனாதி ஏ.எல்.ராசு பேசினார். மாநிலக்குழு முடிவுகளை மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் விளக்கி பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பொன்னமராவதி தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை பூச்சிகள் தாக்கி நாசமாகி விட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.காரையூர் கருகப்பூலாம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கியுள்ள இரண்டு ஏக்கர் நிலங்களை மோசடி கும்பல் அனுபவித்து வருகிறார்கள். இது குறித்து நிலமோசடி பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலங்கள் வழங்கப்பட்ட 9 பேருக்கும் மீண்டும் நிலங்களை மீட்டு வழங்க வேண்டும்.

பொன்னமராவதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா, வீடு கட்ட ரூ.5 லட்சம் வழங்கவும், தகுதி வாய்ந்த முதியோர், விதவை, மாற்றுத்திறளாளிகளுக்கு உதவித்தொகை வழங்கவும் வலியுறுத்தியும் வட்டாட்சியரிடத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தி மனுக்கள் வழங்கப்பட்டது. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.அரசுக்கு சொந்தமானஇடங்களில் பூர்வீகமாக குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் நிர்வாகிகள் நாகலிங்கம், அடைக்கலம், வெள்ளைக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னதாக ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் பிரதாப்சிங் நன்றி கூறினார்.

Related Stories: