மாணவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை புதுக்கோட்டையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டத்தில் 48 மனுக்கள் குவிந்தன

புதுக்கோட்டை, பிப். 6: புதுக்கோட்டையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டத்தில் 48 கோரிக்கை மனுக்கள் குவிந்தன. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும், விலையில்லா வெள்ளாடுகள், விலையில்லா கறவை மாடுகள், பசுமை வீடு வழங்க வேண்டும், சுயதொழில் துவங்க மானிய கடன், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை கேட்டு 48 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது தனிகவனம் செலுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிரவன் பங்கேற்றனர்.

Related Stories: