மேலூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

மேலூர், பிப். 4: தினகரன் செய்தி எதிரொலியாக மேலூர் பகுதியில் அறுவடை செய்த நெல்களை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஒரு போக ஆயக்கட்டு பகுதியான மேலூர் பகுதிக்கு பெரியாறு வைகை அணையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அத்துடன் பருவமழையும் கைகொடுக்க விவசாயிகள் முழுவீச்சில் நெல் நடவு செய்தனர். தொடர்ந்து கால்வாயிலும் நீர் விடப்பட்டதால் மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடைமடையை தவிர்த்து அனைத்து இடங்களிலும் ஏறக்குறைய சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நெல் அறுவடைக்கு தயாராகி விட்டது.

ஆனால் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள், வியபாரிகளிடம் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.  எனனே மேலூர் பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என ‘தினகரன்’ நாளிதழில் ஜன. 29ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் வெள்ளலூர், உறங்கான்பட்டி, கொட்டகுடி, திருவாதவூர், நொண்டிக்கோவில்பட்டி, மேலவளவு, கீழையூர், தனியாமங்கலம், தும்பைபட்டி, தெற்குதெரு உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள்

திறக்கப்பட்டது.

Related Stories: