கல்லுமலை கோயில் சித்திரை திருவிழா

அலங்காநல்லூர், ஏப். 28: பாலமேடு அருகே வைகாசிபட்டியில் கல்லுமலை கந்தன் கோயலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பாலமேடு அடுத்துள்ள சாத்தியார் அணை அருகே, வைகாசிபட்டியில் இயற்கை எழில் சூழ்ந்த மலையடிவாரத்தில் உள்ளது கல்லுமலை கந்தன் ராமலிங்க சுவாமி கோயில். இக்கோயிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விநாயகர், கல்லுமலை கந்தன் மற்றும் ராமலிங்க சுவாமி ஜீவசமாதியில் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்கள் நிலத்தில் விளைந்த மா, கொய்யா, வாழை, கரும்பு, காய்கறிகள், அரிசி, பருப்பு, நெல், நவதானியங்கள், உப்பு, மிளகு, சேவல், கோழி, உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தினர். விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post கல்லுமலை கோயில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: