பெருந்துறையில் சர்வதேச மாநாடு துவக்கம்

பெருந்துறை, ஜன.31: கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் உலக விவகாரங்களுக்கான இந்திய சபை (ICWA) இணைந்து நடத்தும் “சார்க் நாடுகளுடனான இந்தியாவின் உறவு, கொள்கைகள், சவால்கள் மற்றும் உத்திகள்” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு கல்லூரி வளாகத்தில் நேற்று காலை துவங்கியது. கல்லூரி தாளாளர் சச்சிதானந்தம்  மாநாட்டை துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். விழாவில், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை செயலாளர் பழனிசாமி, முதல்வர் பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கல்லூரியின் வணிக  மேலாண்மை துறை தலைவர் சோமசுந்தரம் மாநாட்டை பற்றி விளக்கிக் கூறினார். நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் ராதே ஷ்யாம் பிரதான், மாலத்தீவின் முன்னாள் அமைச்சர் அகமது முனாவர், நேபாள ராஷ்டிர வங்கியின் முன்னாள் கவர்னர் திலக் ராவல், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சகாதேவன், உலக விவகாரங்களுக்கான இந்திய சபையின் பிரதிநிதி அன்வேஷ கோஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். இம்மாநாட்டில் 125 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா, நேபாளம், இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: