கோவை, ஜன.30: இண்டேன் எல்பிஜி வாடிக்கையாளர்கள் நலன்கருதி டிஜிட்டல் பேமென்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இண்டேன் விநியோகஸ்தர்கள், இண்டேன் எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு வந்து வழங்குகின்றனர். சிலிண்டர் ஒப்படைத்த உடன் வாடிக்கையாளர் ைகயொப்பமிடும் கேஷ் மெமோவில் சில்லறை விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை டெலிவரி செய்யப்படும் சிலிண்டர்களுக்கான ஒப்படைப்பு கட்டணத்தை உள்ளடக்கியதாகும். இண்டேன் சிலிண்டருக்குரிய சரியான விலையை வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேமென்ட் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்கள் ஐவிஆர்எஸ் மூலம் சிலிண்டர் பெற புக்கிங் செய்தவுடன் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு மெசேஜ் மூலமாக ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் (htpp://payit.cc/L1xxxxxx) அனுப்பி வைக்கப்படும். இந்த லிங்க் ஒரு நாளைக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த ஆன்லைன் முகவரியை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள், கேஷ் மெமோவில் குறிப்பிட்டுள்ள தொகையை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ- வாலெட் உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்லைன் பேமென்ட் ெசய்யலாம். இந்த வழிமுறையில் சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.