படகு இ புனித பாத்திமா அன்னை தேர்பவனி  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் டெக்ஜியம் ஹெக்கத்தான் போட்டியில் சாதனை

கோவை, மே 21: பெங்களூருவில் அமைந்துள்ள எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் வளாகத்தில் ஏழாவது பதிப்பு டெக்ஜியம் ஹெக்கத்தான் போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஐ.ஐ.டி என்.ஐ.டி மற்றும் முன்னணி பொறியியல் 500 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 40,000 பேர் குழுக்களாக கலந்து கொண்டனர். இதில், கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியை சேர்ந்த ஆறு குழுக்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையை சேர்ந்த ஜோசிக்கா, ஜீவமீனா, ஜனனி, அருண்ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் டிஜிட்டல் வெல் ட்வின்ஸ்கேப் ஆயில் வெல் மானிட்டர் புரோட்டோடைப் என்ற படைப்பு, இரண்டாம் இடம் பெற்று ஐந்து லட்சம் பரிசு தொகை வென்றது. வாகனத் துறையில் பனானா பைபர் ஆட்டோ நிலையான மக்கும் வாகனக் கூறுகள் படைப்புக்கு, ஹரிஷ், தீரஜ், ஆதித்யன் , தினேஷ் ஆகியோருக்கு பணியாளர் தேர்வுக்கான விருது கிடைக்க பெற்றது. பரிசு பெற்றவர்களை எஸ்என்ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, முதல்வர் என்.ஆர் அலமேலு, கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ் ஆகியோர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

The post படகு இ புனித பாத்திமா அன்னை தேர்பவனி  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் டெக்ஜியம் ஹெக்கத்தான் போட்டியில் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: