சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து

 

கோவை, மே 20: கோவை சுந்தராபுரம்-மதுக்கரை சாலையில் சென்ற அரசு பேருந்து பாதாள சாக்கடை பணிக்காக தோண்டி மூடப்பட்ட சாலையில் வந்தபோது பேருந்தின் முன்சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் சிக்கியது.கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கோவை சுந்தராபுரம்- மதுக்கரை சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது.

பணிகள் நிறைவடைந்து குழிகள் மூடப்பட்ட நிலையில், நேற்று மதுக்கரையிலிருந்து காந்திபுரம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று மோகன் நகர் அருகே வந்தபோது பாதாள சாக்கடை பணிக்காக தோண்டி மூடப்பட்ட பள்ளத்தில் பேருந்தின் முன்சக்கரம் இறங்கி சிக்கியது. இதனால் பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள், பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பேருந்தை மீட்டனர். இதனால் சிறிது நேரம் மதுக்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து appeared first on Dinakaran.

Related Stories: