விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய மாநகராட்சி டிரைவர்களுக்கு பரிசு

மதுரை, ஜன. 29: கடந்த 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய மாநகராட்சி டிரைவர்களுக்கு தங்கக்காசு பரிசு வழக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் பொக்லைன்கள், லாரிகள், அதிகாரிகளின் கார்கள் என பலவகையான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களை விபத்து இல்லாமல் ஓட்டிய டிரைவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய மாநகராட்சி டிரைவர்கள் ராஜா, சிவக்குமார், ஜெகதீசன், மனோகரன், பாஸ்கர், ரவிச்சந்திரன் மற்றும் கணேசன் ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலா 4 கிராம் தங்கக்காசு பரிசாக மாநகராட்சி கமிஷனர் விசாகன் வழங்கினார். மேலும் 10 ஆண்டுகள் ஓட்டுனர்களாக பணிமுடித்த 25 டிரைவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள வங்கி வைப்புத்தொகை பத்திரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: