உசிலம்பட்டி, டிச. 19: உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அருகே நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது, இதன்படி, சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதனால் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் போக்குவரத்து போலீசார் விபத்துகள் நடைபெறாமல் இருக்க, சாலை நடுவே தடுப்புகளை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழனிடம், இச்சாலை பகுதியை சீரமைத்து மின்விளக்குகள் பொருத்தும்படி, கல்லூரி மாணவர்கள் கோரினர். இதனை ஏற்று இளமகிழன் சாலை சீரமைப்பு பணிகளை சொந்த செலவில் மேற்கொண்டு வருகிறார். மேலும் அப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் மின்விளக்குகள் அமைத்துள்ளார். இவரது நடவடிக்கைக்கு மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
