மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

மதுரை, டிச. 20: மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் ரயில்வே மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் உட்கார்ந்த நிலையில் மற்றும் நின்று கொண்டு குண்டு எறிதல், கைப்பந்து, கிரிக்கெட், வலைப்பந்து, பந்து உருட்டுதல், அதிர்ஷ்ட மூலை போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுவாமிநாதன், கோட்ட விளையாட்டு அதிகாரி சந்திரசேகரன் உட்பட ஏராளமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: