இரு வாலிபர்கள் குண்டாசில் கைது

மதுரை, டிச. 19: மதுரை, மேல அனுபானடி பகுதியை சேர்ந்தவர் நவீன்ராஜ் (21). இவர் மீது கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல், கரிமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் ஆகாஷ் (19). இவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளார். இருப்பினும் அவர் தனது குற்ற நடவடிக்கைகளை தொடர்வது, போலீசார் கண்காணிப்பில் உறுதியானது.

இதையடுத்து இவர்களின் செயல்பாடுகள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் அவர்களின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: