ஏற்காட்டில் விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி சிகிச்சை முகாம்

ஏற்காடு,  ஜன.28:  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  வாரத்தையொட்டி, விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி அளிப்பது குறித்து  விளக்கமளிக்கும் நிகழ்ச்சி, ஏற்காடு எஸ்ஐ ரகு தலைமையில்  நடைபெற்றது. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள்  அதிகம் கூடும் இடமான டாக்ஸி ஸ்டாண்ட் பகுதியில் நடைபெற்ற முகாமில், 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர் சிகாமணி கலந்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தில்  சிக்கி கை, கால், தலை உள்ளிட்ட பகுதியில் காயம் ஏற்பட்டவருக்கு, கட்டு  போட்டு, ஆம்புலன்ஸ் ஸட்ரக்சரில் தூக்கி வைப்பது எவ்வாறு என்பது குறித்து செயல்முறை  விளக்கம் செய்து காண்பித்தார். முன்னதாக தலைக்கவசம் அணிய  வேண்டும், காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை காவல்துறையினர்  பொதுமக்களுக்கு வினியோகித்தனர். நிகழ்ச்சியில் எஸ்எஸ்ஐ செந்தில்  உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: