ரோட்டோரம் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை

பொள்ளாச்சி, ஜன. 24: பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, ராமபட்டிணம் பகுதியை சேர்ந்த சபரீஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலர் கொடுத்த மனுவில், ‘பொள்ளாச்சி அருகே, பாலக்காடுரோடு மெயின் சாலையிலிருந்து ராமபட்டிணம் கிராமம் வரையில் உள்ள தார் சாலையை, நெடுஞ்சாலைத்துறை மூலம் சுமார் 1 மீட்டர் அளவில் விரிவாக்க பணி நடக்கிறது.  ராமபட்டிணம் ஆரம்பசுகாதார நிலையத்திலிருந்து சாலையோரம் கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவோரின் வீடுகள் முழுமையாக அகற்றக்கோரி நெடுஞ்சாலைதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அந்த இடத்தை காலிசெய்தால் அவர்கள் குடியிருக்க வேறு வழியில்லை.  எனவே, நெடுஞ்சாலைதுறைக்கு தேவையான அளவிற்கு மட்டும் விரிவாக்கம் செய்து, மீதுமுள்ள இடத்தில் எப்போதும்போல் வசிக்க அனுமதிக்க வேண்டும் அல்லது மாற்று இடம் கொடுக்க வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: