வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற பிளஸ் 1 மாணவி திடீர் சாவு

சேலம், ஜன. 24: சேலம் செவ்வாய்பேட்டை ஆற்றோரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் ரோஜா(17). இவர் மூங்கில்பாடி அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் ரோஜாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ரோஜாவை பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்து மருத்துவரை சந்தித்தனர்.பின்னர் வயிற்று வலிக்கான மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனர். இந்நிலையில், மாலையில் வயிற்று வலி அதிகமாகி ரோஜா வீட்டில் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த பெற்றோர், மகளை மீட்டு உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது, ரோஜா எந்த வித அசைவும் இல்லாமல் இருந்ததாக கூறுப்படுகிறது. அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது என தெரிய வந்தது.  தகவலறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் அரசு மருத்துவமனைக்கு வந்து மாணவி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே மாணவி இறந்ததற்கான முழு விபரங்களும் வெளியே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: