மாவட்டம் நோய் தாக்குதலால் முருங்கை விவசாயம் பாதிப்பு

சின்னமனூர், ஜன. 23:சின்னமனூர் பகுதிகளிலுள்ள பல்வேறு கிராமங்களில் தனிப்பயிராக முருங்கை மரம் வளர்த்து தொடர் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர். எரச்சக்கநாயக்கனூர், ஊத்துப்பட்டி, முத்தலாபுரம், சின்ராகவுண்டன்பட்டி, பள்ளிக்கோட்டைபட்டி, சீப்பாலக்கோட்டை, ஒடைப்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி என பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் முருங்கையை பராமரித்து நிலத்தடிநீர் பாசனத்தில் சாகுபடி செய்கின்றனர். வருடத்தில் 6 மாதம் வரை முருங்கை விளைச்சலில் அறுவடை செய்து சின்னமனூர் மற்றும் தேனி ஏலச்சந்தைகளுக்கு அனுப்புகின்றனர். அவ்வப்போது விலை உயரும் நேரத்தில் விவசாயிகள் பலன் அடைகின்றனர். உற்பத்தி அதிகரிக்கும்போது பெரும் நஷ்டம் ஏற்படாமல் ஓரளவிற்கு தப்பித்து கொள்கின்றனர். தற்போது பல கிராமங்களில் வரும் பிப்ரவரி மாதம் இலையுதிர் காலமாக வருவதால் முன்னதாகவே முருங்ககை மரங்கள் எல்லாம் பசுமை முற்றிலும் மறைந்து பட்ட மரமாக காய்ந்து நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: