சேலம், ஜன.21: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள தொகுதி-1 முதல்நிலைத் தேர்வு பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஞானசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள தொகுதி-1 முதல்நிலைத் தேர்வு பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வரும் 23ம் தேதி நடக்கிறது.