நீடாமங்கலம் ஒன்றிய பகுதியில் 12,901 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

நீடாமங்கலம்,ஜன.21: நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் நேற்று முன்தினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் சித்தமல்லி ஊராட்சி சார்பில் நடந்த முகாமில் ஒன்றியக்குழு தலைவர் சித்தமல்லி செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.பின்னர்அவ்வழியில் வந்த வாகனங்களில் சென்ற குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி,சித்தமல்லி ஊராட்சி தலைவர் குணசீலன், மற்றும் வார்டு உறுப்பினர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் செவிலிலயர்கள் கலந்து கொண்டனர். பரப்பனாமேடு ஊராட்சியில் அதன் தலைவர் கைலாசம்,ஆதனூர் ஊராட்சி தலைவி சந்திரா அன்பழகன்,பொதக்குடி ஊராட்சி தலைவர் மல்லிகாபிச்சை,ஆய்குடி ஊராட்சி தலைவி கவுதரவி உள்ளிட்ட நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளிலும் 6 கிராம சுகாதார நிலையங்கள் உள்ளது.இதில் 96 மையங்களில் 11,561 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் .நேற்று மற்றும் வெளியூரிலிருந்த வந்த குழந்தைகள் 952பேர் உள்ளிட்ட 12,901 பேருக்கு நேற்று முன்தினம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.விடுப்பட்ட குழந்தைகளுக்கு நேற்று வழங்கப்பட்டது.இந்தபணியில் சுகாதார துறை யைசேர்ந்த 28பணியாளர்கள்,132 அங்கன்வாடி பணியாளர்கள்.199 தன்னார்வத் தொண்டர்கள் பணியாற்றினர்.

Related Stories: