அத்திமரப்பட்டியில் தாழ்வான நிலையில் திறந்த மின்பெட்டியால் விபத்து அபாயம்

ஸ்பிக்நகர், ஜன.20: தூத்துக்குடி ஸ்பிக்நகரை அடுத்த அத்திமரப்பட்டியில் தாழ்வான பகுதியில் திறந்த நிலையில் காணப்படும் மின்பெட்டியால் விபத்து அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்பிக்நகரை அடுத்த அத்திமரப்பட்டியில் தெரு விளக்குகளை ஆன் மற்றும் ஆப் செய்வதற்கான பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியானது மிகவும் தாழ்வான நிலையில் காணப்படுகிறது. அதோடு மின்பெட்டி சரியாக பராமரிக்கப்படாததால் அதனை பூட்ட இயலாத நிலையில் உள்ளது.

Advertising
Advertising

இதனால் 24 மணி நேரமும் திறந்த நிலையில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இப்பெட்டி அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு எளிதாக எட்டும் நிலையில் உள்ளதால் இதனை உயரமாக வைத்து பூட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: