மாவட்டத்தில் 2270 மையங்களில் 3.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து'

சேலம், ஜன.20: சேலம் மாவட்டத்தில் 2270 மையங்களில் 3 லட்சத்து 48 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட குமாரசாமிப்பட்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்நடந்த முகாமில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்தினை வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 48 ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரே சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 312 துணை சுகாதார நிலையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13 அரசு மருத்துவமனைகள், 18 தனியார் மருத்துவமனைகள், 181 பள்ளிகள், 1387அங்கன்வாடி மையங்கள், 44 சத்திரங்கள் மற்றும் சாவடிகள், 208 இதர முகாம்கள் எனமொத்தம் 2270 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 9 ரயில் நிலையங்கள், 52 பேருந்து நிலையங்கள், 4 சுங்கச்சாவடிகள், 8திரையரங்குகள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் விழா நடைபெறும் இடங்கள்உள்ளிட்ட 77 போக்குவரத்து முகாம்கள் வாயிலாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் மொத்தம் 9940 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 222 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 90,210 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. இதில் 1500 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தனி நடமாடும் குழுக்கள் மூலம் குடிசைப்புறப்பகுதிகள், சாலையோரம் வசிக்கும் மக்கள், நாடோடிகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதன் மூலம் சமுதாய எதிர்ப்புச் சக்தி உருவாகிறது. தவிர்க்க இயலாத காரணத்தினால் சொட்டு மருந்து வழங்கப்படாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக பணியாளர்கள் தொடர்ந்து 7 நாட்களுக்கு வீடு வீடாக சென்று விடுப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அக்குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 3 லட்சத்து 48 ஆயிரத்து 533 குழந்தைகளுக்கு போலியோ சொட்ட மருந்து வழங்கப்பட்டது. விடுப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓமலூர்: ஓமலூர், காடையாம்பட்டி  ஆகிய தாலுகாவிலும் 3 ஒன்றியங்கள், 4 பேரூராட்சிகள் மற்றும் 67  கிராம ஊராட்சிகளில், மொத்தம் 350 சொட்டு மருந்து முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஓமலூரில் நடந்த முகாமை வெற்றிவேல் எம்எல்ஏ  கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதேபோல் முன்னாள் எம்எல்ஏ  பல்பாக்கி கிருஷ்ணன், ஓமலூர் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ரோட்டரி சங்க  தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் முருகானந்தம், சங்க பொருளாளர் சரோஜா  ஆண்டியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு  மருந்து வழங்கினர். வட்டார மருத்துவ அலுவலர் ரமணன் வரவேற்றார். முகாமிற்கான  ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், ஆய்வாளர்கள் சுக்லா,  ஜெகன், இளங்கோ, சதீஸ்குமார், மீனாட்சிசுந்தரம், அண்ணாமலை, ராஜமாணிக்கம்  ஆகியோர் செய்திருந்தனர். மேலும், பஸ் ஸ்டாண்ட், சினிமா  தியேட்டர்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து  மையங்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டது.  ஓமலூர் உட்பட 67 கிராம  ஊராட்சிகளிலும் நேற்று சுமார் 75 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து  வழங்கப்பட்டது.

அயோத்தியாபட்டணம்: அயோத்தியாபட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 3500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மாசிநாயக்கன்பட்டி தலைவர் மேகலா தேவேந்திரன், டாக்டர் ஹரிணி தேவேந்திரன், மாசிநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை உதவி மருத்துவர் முத்தமிழ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் உஷா ராஜகோபால், வார்டு உறுப்பினர்கள் ஜீவரேகா, பெரியசாமி, வெண்ணிலா, உமாபதி மற்றும் நிர்வாகிகள் வேணுகோபால், பெருமாள், ராஜேந்திரன், ஹரிஹரா, மதன்ராஜ், ஷாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மகுடஞ்சாவடி :மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் பகுதியில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை சங்ககிரி எம்எல்ஏ ராஜா துவக்கி வைத்தார். முகாமில்  மகுடஞ்சாவடி ஒன்றிய குழு தலைவர் லலிதா, துணைத்தலைவர் சரஸ்வதி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இடைப்பாடி:இடைப்பாடி ரோட்டரி சங்கம் சார்பில், இடைப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் நடந்தது.

ரோட்டரி சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். முகாமினை ேராட்டரி துணை ஆளுநரும், யுனிவர்சல் சீனிவாசன் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் தங்கவேலு, ஜான்விக்டர் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் அர்த்தநாரிஸ்வரன், கனகசபாபதி, ராஜா, சந்திரன், செங்கோட்டையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர்: ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டன. முகாமினை ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் தேவி தலைமையில் சின்னதம்பி எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழச்சியில் ஆத்தூர் நகரமன்ற முன்னாள் துணை தலைவர் மோகன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் முரளி, சுகாதார அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர்கள் செல்வராஜ், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: