ஓமலூரில் பசுமை தாயகம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

ஓமலூர், ஜன.20: ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட பசுமை தாயகத்தின் சார்பில், இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. ஓமலூரில் சேலம் சுரக்க்ஷா மருத்துமனை, சேலம் மேற்கு மாவட்ட பசுமை தாயகம் இணைந்து, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் சதாசிவம் வரவேற்றார். மாநில துணை செயலாளர் ஆனந்தராஜன் தலைமை வகித்தார். பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில், மருத்துவர் தருண் ஜி.கே.மணிக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். கண் பரிசோதனை, ஈசிசி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், காது, மூக்கு  தொண்டை, இருதயம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் கண்ணையன், மாணிக்கம், சத்திரியசேகர், சதாசிவம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி, ராஜேந்திரன், பரமேஸ்வரி, முருகன், அண்ணாமலை, குமார், மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: